கடல் , பெயர்ச்சொல்.

  • பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது.
  • கடல்களின் பண்புகள் பற்றி பிறசொற்களாலும் வழங்கப்படு அவற்றை விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்,
கடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்
  • கடலுக்கு அதன் ஆழம் பற்றி, பரந்த பரப்பு பற்றி, அலைகள் எழுவது பற்றி, சில இடங்களில் கொந்தளிப்பது பற்றி, இரைச்சல் இடுவது பற்றி, உப்புநீர் பற்றி (உவர் நீர்), மழை தருவது பற்றி என பற்பல பண்புகளால் பல பெயர்கள் உள்ளன. தமிழில் கடலுக்கான பெயர்கள் பலவற்றைக் கீழே காணலாம்.
  1. அரலை
  2. அரி
  3. அலை
  4. அழுவம்
  5. அளம், அளக்கர்
  6. ஆர்கலி
  7. ஆலந்தை (ஆல் =நீர்)
  8. ஆழி
  9. ஈண்டுநீர் (ஈண்டுநீர் மிசைத்தோன்றி (கலித்தொகை. 100).)
  10. உரவுநீர் (உரகடல், கொந்தளிக்கும் கடல்)
  11. உவர், உவரி
  12. உவா
  13. ஓதம் - ஓதமலி நஞ்சுண்ட வுடையானே (திருவாசகம். 38, 3).
  14. ஓதவனம்
  15. ஓலம்
  16. கடல்
  17. கயம் (கயங்கரந்துறை யரக்கரை (உபதேசகா. விபூதி. 201). கையம்
  18. கலி
  19. கார்கோள்
  20. கிடங்கர்
  21. குண்டுநீர் (குண்டுநீர்வையத்து (நாலடியார், 94).)
  22. குரவை
  23. சக்கரம் (சூடாமணி நிகண்டு.)
  24. சலதரம், சலநிதி, சலராசி
  25. சலதி
  26. சுழி
  27. தாழி
  28. திரை (திரைவள ரிப்பி (சீவக சிந்தாமணி. 2645).)
  29. துறை (துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக் காஞ்சி. 85)
  30. தெண்டிரை
  31. தொடரல்
  32. தொன்னீர்
  33. தோழம் (முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா. 88, 23). )
  34. நரலை
  35. நிலைநீர் (கல்லா. 21, 1, மயிலேறும்.))
  36. நீத்தம் நீந்து (நீந்து நித்தில விதான நீழலான்(சீவக சிந்தாமணி. 2421).)
  37. நீரகம்
  38. நிரதி
  39. நீராழி
  40. நெடுநீர்
  41. நெறிநீர் (நெறிநீர் வளையும் (சீவக சிந்தாமணி.1522)
  42. பரப்பு, பரவை, பரு
  43. பாரி
  44. பாழி
  45. பானல்
  46. பிரம்பு
  47. புணர்ப்பு
  48. உழுவம்
  49. புணரி
  50. பெருநீர் (பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப்பதிகாரம்6,112)
  51. பௌவம்
  52. மழு ((தக்க யாகப். 457, உரை.))
  53. முந்நீர்
  54. வரி
  55. வலயம்
  56. வளைநீர் (வளைநீரோசை தனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6).)
  57. வாரி, வாரிதி
  58. வீரை
  59. வெண்டிரை
  60. வேலாழி (வேலாழி சூழலகு (திணைமாலை. 62).)
  61. வேலை
  62. சாகரம்
மொழிபெயர்ப்புகள்
  1. sea, ocean ஆங்கிலம்
  2. सागर, अम्बुधि இந்தி
  3. (சீனம்)

சொல்வளம் தொகு

கடல், கடல்நீர், கடல்நாய், கடல் வாழ், கடல்மட்டம்
கடற்கரை, கடற்படை, கடற்பசு, கடற்பயணி
கடலலை, கடலியல், கடற்கோள்
பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல், செங்கடல், கருங்கடல்
அலைகடல்

கடல் பயணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடல்&oldid=1995466" இலிருந்து மீள்விக்கப்பட்டது