கரடு முரடு

சொல் பொருள்

கரடு – மேடு பள்ளமுடையதாயும் வழுவழுப்பும் ஒழுங்கு மற்றதாயும் அமைந்தது. முரடு – ஒப்புத்தரத்தின் விஞ்சிய பருமையும் தோற்றப் பொலிவும் அற்றது.

விளக்கம்

துணி, தாள், நிலம் முதலியவற்றைக் கரடு முரடாக இருக்கிறது என்பது வழக்கு. சிலர் பண்பியல் ஒவ்வாமையையும் சொல்லினிமையின்மையையும் கருதிக் ‘கரடுமுரடு’ எனல் உண்டு.

கரடு, கருநிறமானதும் ஒழுங்கற்றதும் கல்லும் சரளையும் செறிந்ததுமாகிய திரட்டைக் குறித்துப் பின்னே மற்றவற்றுக்கு ஆயிற்று. கரட்டு நிலத்தில் பெரிதும் வாழ்வதும், கரடு உடையதும் ஆகிய உயிரி ‘கரட்டான்’ என்பதை அறிக.

முரடு மாறுபட்ட அமைவுடையது என்பதை ‘முரண்’ என்பதால் அறிக. முரண்டு, முரடன், முரட்டாட்டம் என்பவனற்றையும் கருதுக.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரடு_முரடு&oldid=1913204" இலிருந்து மீள்விக்கப்பட்டது