சணப்பச்செடி

சணப்பச்செடி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சணப்பச்செடி, பெயர்ச்சொல்

பொருள் தொகு

  1. ஒரு மருத்துவத் தாவரம்
  2. புளிவஞ்சி

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a medicinal plant

விளக்கம் தொகு

  • மருத்துவப் பயனுள்ள செடி...இதன் இலைக்கு கசப்பும்,காரமுமுண்டு...இதை அரைத்துக் கட்டிகளுக்கு வைத்துக்கட்ட உடைத்துக்கொள்ளும்...கியாழமிட்டுக் கொடுத்தால் பித்தவாயு, நீர்க்கசிவுகொண்ட படை, கரப்பான் இவைகள் போகும்...அதையே பெண்களுக்குக் கொடுத்தால் மாதவிலக்கை விரைவில் உண்டாக்கும்...இதன் விதையை 1/2--1 விராகனெடை அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் கருவை வெளியாக்கும்...விதையின் பொடியை நல்லெண்ணெயில் போட்டு ஊறவைத்து தலைக்குத் தடவிவரக் கூந்தல் வளரும்...நாரை முலைகளுக்கு வைத்துக்கட்ட பாற்சுரப்பு வற்றும்...விதைப்பொடியை கர்ப்பிணிகள் நீங்கலாக மற்றவர் சாப்பிட இரத்தத்திலுள்ள மாசு நீங்கி நல்ல இரத்தம் உண்டாகும்...தாகம், தேகவெப்பம், பித்தசுரம் ஆகியவன போகும்... இந்த மூலிகையின் மற்றொரு பெயர் புளிவஞ்சி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சணப்பச்செடி&oldid=1218968" இலிருந்து மீள்விக்கப்பட்டது