ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாசிசம், பெயர்ச்சொல்.

  1. ஒரு அரசாட்சி முறை; (தற்கால வழக்கில் இழிசொல் ஆகிவிட்டது)
  2. மொத்த அதிகாரத்தையும் அரசு தன்னிடத்து கொள்ளுதல், வர்த்தக நிறுவனங்களோடு சேர்ந்து இயங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் கட்டுப்படுத்துதல், ஒரே ஒரு தலைவரின் பிம்பத்தை போற்றி அவரைத் தனியதிகார மையமாகக் கொள்ளுதல், அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல், ஒரு கட்சி அரசியல் கொள்கை போன்றவை பாசிச அரசுகளின் பண்புகள்
மொழிபெயர்ப்புகள்
  1. Fascism ஆங்கிலம்
விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • 1920களில் துவங்கி 1943 வரை இத்தாலி நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் கட்சியின் பெயரே பாசிசுட்டுக் கட்சி. பின் அதன் பண்புகளைப் பெற்றிருந்த பிற ஆட்சிகளும் கட்சிகளும் பாசிஸ்டுகள் என்றே வழங்கப் படுகின்றன. 1945ல் பாசிச அரசுகள் இரண்டாம் உலகப் போரில் தோற்ற பின்னர் பாசிசமும் பாசிஸ்டுகளும் இழி சொற்களாகி விட்டன. இடதுசாரி, வலதுசாரி என்று கொள்கைப் பாகுபாடின்றி அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் போட்டியாளர்களைத் தூற்றப் பயன்படுகின்றன.
பயன்பாடு
  • ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை மக்கள் சக்தி கொண்டு அகற்றுவோம் (மதிமுக தலைவர் வைகோ, 2004)



( மொழிகள் )

சான்றுகள் ---பாசிசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசிசம்&oldid=1069074" இலிருந்து மீள்விக்கப்பட்டது