முகவெட்டு உள்ள ஒரு சிறுவன்
முகவெட்டு உள்ள ஒரு பெண்
முகவெட்டு உள்ள ஓர் ஆண்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முகவெட்டு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இராசியான, அழகான முகம்.
  2. முகவசிகரம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. lucky and handsome face

விளக்கம் தொகு

பேச்சுமொழி...முகம் + வெட்டு = முகவெட்டு...அவன்/அவள் மூக்கும் முழியுமாக இலட்சணமாக இருக்கிறான்/இருக்கிறாள் என்பர்..மூக்கும் கண்களும் சரியான அளவில், எடுப்பாக அமைந்தாலே அஃதொரு வசிகரம்...பார்க்க மனம் குளிரும்படியான முகத்தோற்றத்தோடும், பொலிவோடும் முகம் இருப்பதையே அவனுக்கு/அவளுக்கு நல்ல முகவெட்டு என்பார்கள்...இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான காரியங்களும் சுலபமாக முடிந்து விடும்...ஆகவே இதுவே இராசியான முகமும் ஆகிறது...

பயன்பாடு தொகு

  • சுப்பராயன் எங்கு போனாலும் தன் காரியத்தை முடித்துக்கொண்டுதான் வருகிறான்... தோல்வியென்பதே கிடையாது... அப்படியொரு முகவெட்டு அவனுடையது.


( மொழிகள் )

சான்றுகள் ---முகவெட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவெட்டு&oldid=1221691" இலிருந்து மீள்விக்கப்பட்டது