மூர்க்கோபதேசம்

கூட்டிற்குள் பத்திரமாக ஒரு குருவி
மரத்தின் மேல் ஒரு குரங்கு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மூர்க்கோபதேசம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மூடனுக்கு அறிவுரை (செய்யாதே)

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. advice to a fool (to be avoided)

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி...மூர்க்கன் + உபதேசம் = மூர்க்கோபதேசம்-தத்சமம்...அனுபவப்பட்ட பெரியோர் யாருக்கும் கேட்டாலொழிய புத்திமதி சொல்லாதே என்பர்...அப்படியிருக்க ஒரு முட்டாளுக்கு நல்லுரை நாமே சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தச் சொல்...மூர்க்கன் என்றால் முட்டாள், உபதேசம் எனில் அறிவுரை வழங்கல்...இதை விளக்க ஒரு கதையும் சொல்வர்...ஒரு மரத்தில் ஒரு குருவி கூடு கட்டிக்கொண்டு வசித்தது...அதே மரத்தில் ஒரு முட்டாள் குரங்கும் வசித்தது...ஒரு நாள் பெரும் மழை பெய்தது...குருவி தன் கூட்டுக்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக்கொண்டது...ஆனால் குரங்கோ மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியது...மழை நின்றதும் குருவி குரங்கைப் பார்த்து நீ என்னைவிட பெரியவனாகவும், இரு கைகளைக் கொண்டிருந்தும் ஏன் ஒரு வீடு கட்டிக்கொள்ளக்கூடாது? என்னைப் பார் வெகு சிறியவனாக இருந்தும், கைகளில்லாவிட்டாலும் என் சிறு அலகைக்கொண்டே வீடு கட்டிக்கொண்டதால் பெரும் மழையிலிருந்து தப்பித்தேன் என்றது...குருவியின் கூற்றிலுள்ள உண்மையைப் புரிந்துக்கொள்ளாத அந்த மூர்க்கக் குரங்கு கோபம் கொண்டு அந்தக் குருவியின் கூட்டை பிய்த்து எறிந்து விட்டது...பாவம் அந்தக் குருவி, மூர்க்கனான குரங்குக்கு உபதேசம் செய்ததால் வந்த வினை...தன் கூட்டை இழந்து, வேறு மரத்தைத் தேடிச் சென்று விட்டது...ஆகவே ஒரு முட்டாளுக்கு உபதேசம் செய்தால் ஆபத்து உபதேசம் செய்தவருக்கே என்னும் கருத்தைச் சொல்லும் சொல்லே மூர்க்கோபதேசம்

பயன்பாடு தொகு

  • சோமு எவ்வளவுதான் உன் நண்பனாக இருந்தாலும் சற்று யோசனையற்றவன்...அவனுக்கு நீ ஒன்றும் மூர்க்கோபதேசம் செய்யவேண்டாம்...பிறகு பிரச்சினை உனக்குதான்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூர்க்கோபதேசம்&oldid=1818614" இலிருந்து மீள்விக்கப்பட்டது