ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

angel

  1. (கிறித்தவ வழக்கில்) - தூதர், தேவதூதர், வானதூதர், சம்மனசு
  2. (யூத சமயம், இசுலாம்) - தூதர்
  3. தேவதை
  4. ஆதரவு தரும் தெய்வம், துணையாளி, மென்மையும் தூய்மையும் உடையவர், களங்கமற்றவர், அழகுரு, தூதர், பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை

விளக்கம் தொகு

  • angel என்னும் சொல் ἄγγελος (angelos) என்னும் கிரேக்க மூலத்திலிருந்து பிறந்தது. அது "செய்திகொண்டு செல்வோர்", "தூதர்" (messenger) எனப் பொருள்படும். கிறித்தவ இறையியல்படி, கடவுள் அறிவும் கூருணர்வும் கொண்ட ஆவிநிலைப் படைப்புகளையும் உருவாக்கினார். அத்தகைய ஆவிகள் கடவுளின் தூதர்களாகவும், மனிதர்களுக்குப் பாதுகாப்பு நல்குவோராகவும் செயல்படுகின்றனர் என்பது கிறித்தவ நம்பிக்கை.

எடுத்துக்காட்டு தொகு

கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள்...மரியாவிடம் அனுப்பினார் (லூக்கா 1:26)திருவிவிலியம்

உசாத்துணை தொகு

தமிழ்ப் பேரகராதி
பால்சு அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=angel&oldid=1527093" இலிருந்து மீள்விக்கப்பட்டது