ஒலிப்பு

பொருள்

  1. எண்களில், இது முதல் எண் ஆகும்.
தமிழ் எண் ஒன்று ’க’
  1. பயன்பாடு
    யாவர்க்கும் தலை ஒன்று
    ஒன்று எங்கள் சாதியே
    ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும்
    ஒருவர் பெற்ற மக்களே (படம்: பணக்கார குடும்பம்)
    முத்தம் ஒன்னு கொடு!(திரிபு - ஒன்று-->ஒன்னு)
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
    ஒருவாறு உடன்பட்டான்.
    ஒரு வழி கண்டறிந்தேன்.
    ஏதோ ஒன்று, மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னவென்று தெரியவில்லையே!
  2. ஒரு பொருள் (அஃறிணை ஒருமை)

சொல்வளம்

  1. ஒற(நெருங்கி வருதல்) --> ஒரு(ஒன்றாதல்) --> ஒன்று --> ஒண்ணு (one)


விளக்கம்
  • ஒன்று ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.
  • ஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.
  • one thingஆங்கிலம்
ஒன்று
ஒன்றரை, ஒன்றன்பால்
ஒன்றுபடு, ஒன்றுசேர்
ஓர், ஒரு, முதல்
பதினொன்று, இருபத்தொன்று


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

முனைவர் தமிழப்பன் மெய்.மு "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்று&oldid=1997433" இலிருந்து மீள்விக்கப்பட்டது