கடை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடை
(பெ)
- முடிவு. (பிங். )
- இடம். (திவா.)
- எல்லை
- கடையழிய நீண்டகன்ற கண் ணாளை (பரிபா. 11, 46)
- அங்காடி. (பிங். )
- கீழ்மை
- நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1, 60)
- தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்
- கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (நாலடி., 255)
- வாயில்
- கடைகழிந்து (அகநா. 66)
- பூண்கடைப் புணர்வு. (திவா.)
- காம்பு
- கடை குடை யெஃகும் (மலைபடு. 490).
- சோர்வு. (அக. நி.)
- வழி. (யாழ். அக. )
- பெண்குறி. (யாழ். அக. )
(இலக்கணம்: பகுதி)
- ஏழனுருபு. (நன். 302.)
- ஓர் உபசருக்கம்
- கடைகெட்ட (திருப்பு. 831)
- ஒரு வினையெச்ச விகுதி
- ஈத லியையாக் கடை (குறள்., 230)
(வி)
- மத்தால் கடைதல்
- பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2)
- மரம் முதலியனவற்றை இழைத்தல்
- கடைந்த மணிச்செப் பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52)
- மசித்தல்
- மிகப்பண்ணுதல்
- காதலாற் கடைகின்றது காமமே (சீவக. 1308)
- அரித்தல்
- கடையுங் கட்குரல் (சீவக. 1202)
- கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.
- தொண்டையிற் கபங் கடைகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
n.
- end, termination, conclusion
- place
- limit, boundary
- shop, bazaar, market
- inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst
- degraded person, man of low caste
- entrance, gate, outer gateway
- clasp, fastening of a neck ornament
- handle, hilt
- fatigue
- way
- Pudendum muliebre
(இலக்கணம்: பகுதி)
- Sign of the locative
- Verbal prefix
- Termination of a verbal participle
- கடை - கடைதல் - கடைசல்
- கடைசி, கடைக்கண், கடைவீதி, கடைத்தெரு
- கடைக்கோடி
- அந்திக்கடை, அலங்கடை, அறங்கடை, எதிர்க்கடை, கள்ளக்கடை, காசுக்கடை, குஜிலிக் கடை, சாப்பாட்டுக்கடை, சில்லறைக்கடை, தயிர்கடை, தவணைக்கடை
- பிறங்கடை, புழைக்கடை, புறங்கடை, மலர்க்கடை, வயற்கடைதூரம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி