கன்னி
தமிழ்
தொகு[[|thumb|100pxpx||கன்னி:
எனில் குமரிப் பெண்]]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- कन्या--க1ந்யா---மூலச்சொல்
- aloe barbadensis..(தாவரவியல் பெயர்)--பொருள் 16க்கு
- clitoria ternatea..(தாவரவியல் பெயர்)--பொருள் 17க்கு
பொருள்
தொகு- கன்னி, பெயர்ச்சொல்.
- குமரி
- இளமை
- புதுமை
- முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர்
- அழிவின்மை
- பெண் (சூடாமணி நிகண்டு)
- தவப் பெண் (சூடாமணி நிகண்டு)
- என்றும் இளமையழியாத பெண்,சத்தகன்னியர் (பிங். )
- துர்க்கை
- பார்வதி (பிங். )
- குமரியாறு
- கன்னியாராசி (பிங். )
- புரட்டாசி மாதம்
- காண்க...அத்தம் நட்சத்திரம் (திவா.)
- தசநாடியிலொன்று (சிலப். 3, 26, உரை.)
- காண்க...கற்றாழை (சூடாமணி நிகண்டு)
- காண்க...காக்கணம் (திவா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- virgin, maiden, young unmarried woman
- youthfulness, tenderness, juvenility, virginity
- freshness
- state of being earliest in time
- imperishable state
- woman
- female ascetic
- female possessing perpetual youth, as celestials
- durga, a female hindu deity
- parvati, a female hindu deity, consort of lord shiva
- name of a river that flowed in ancient times, south of cape comorin
- virgo, a zodiacal sign
- the tamil month Puraṭṭāci
- the 13th nakṣatra (star) of hindu almanac
- a principal tubular vessel of the human body, one of taca-nāṭi-தசநாடி
- aloe
- mussel-shell creeper
பயன்பாடு
- கன்னி மேரி (Virgin Mary)
- கனவுக் கன்னி (dream girl)
- கன்னி கழியாத பெண் (a girl who has not lost virginity)
- கன்னி உரை (maiden i.e. first speech)
- கன்னி முயற்சி (first attempt)
(இலக்கியப் பயன்பாடு)
- கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட (பாடல்)
- கன்னி மனக்கோயில் கைக்கொள்ள (நளவெண்பா
இராசிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உதள் மேஷம் |
ஏற்றியல் ரிஷபம் |
ஆடவை மிதுனம் |
நள்ளி கடகம் | ||||||||
மடங்கல் சிம்மம் |
ஆயிழை கன்னி |
நிறுப்பான் துலாம் |
நளி விருச்சிகம் | ||||||||
கொடுமரம் தனுசு |
சுறவம் மகரம் |
குடங்கர் கும்பம் |
மயிலை மீனம் |
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +