களப்பிரர்கள்

களப்பிரர்கள்தொகு

நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும் பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தை ஆளத் தொடங்கினர்.

துர்வினிதன்தொகு

துர்வினிதன் கொங்கு நாட்டு அரசர்களில் கங்க வம்சத்தின் 8வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை கி. பி. 482 என அறுதியிட்டுக் கூறுகிறது. இவர் கொங்கணி வர்மனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. முந்தைய மன்னன் அவிந்தனுக்குப் பின் அரியணை ஏறினான். அவரது சகோதரர்களுடன் போட்டியிட்டு அரியணையைக் கைப்பற்றினான்.

கொங்கு நாடுதொகு

கொங்கு நாடு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ள தனி நாடாகிய ஆட்சிப் பகுதியாகும். இதில் தற்போதைய கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முக்கிய நகரங்கள் ஆகும். கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி,நீலகிரி மற்றும் கரூர் மாவட்டதில் கரூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளையும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர், மனவாசி உள்ளிட்ட நான்கு கிராமங்களையும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், ஆத்தூர் பகுதிகளையும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கர்நாடக மாநில கொள்ளேகாலம், பண்டிபுரம், கேரள மாநில அட்டப்பாடி, கொழிஞ்சாம்பாறை, மறையூர் பள்ளத்தாக்கு ஆகியவையும் இதனுள் அடக்கம்

தலவன்புரம் கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், மந்திர சாத்திரங்களைக் கற்று தேர்ச்சி பெற்று அதன் சக்தியால் பல தேச மன்னர்களை வென்றும், சேர, சோழ, பாண்டிய, ஆந்திர, கலிங்க தேசங்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், அறியமுடிகிறது.

கல்வியாளர் துர்வினிதன் மிகச் சிறந்த கல்வியாளராக விளங்கினான், வடமொழியில் நல்ல தேர்ச்சி பெற்று வடமொழிப்புலவர் பாரவி எழுதிய கிருதார்ச் சுனியம் என்னும் நூலுக்கு உரை எழுதினார். குணாட்டியர் என்ற முனிவர் பைசாச மொழியில் எழுதிய பிருகத்கதை தமிழில் மொழி பெயர்த்தார். இதனை கொங்குவேள் என்பவர் பெருங்காவியமாக தமிழில் எழுதினார், இதன் முகவுரையிலும், பாதர் டேபார்டு மிதிக் செய்தித்தாளில் (Mythic Journal) இதன் சிறப்பம்சத்தை அறியலாம்.

ஆட்சியை நிலைநிறுத்தல் துர்விந்தன் ஆட்சியின் போது, பல்லவர்களுக்கும் கங்கர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. கடும் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தார். இந்த வெற்றிகளால் தமிழ் நாட்டின் கொங்குமண்டலம் தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தனது அதிகாரத்தை நீட்டித்துக்கொண்டான்.

சாளுக்கியரிடம் உறவு துர்விந்தன் ஒரு சாமார்த்தியசாலி. பல்லவர்களிடமிருந்து தன் நாட்டைக் காக்க, சாளுக்கியர்களிடம் தன் உறவைப் பலப்படுத்திக்கொண்டான். தன் மகளைச் சாளுக்கிய விசயாதித்தனுக்கு திருமணம் செய்வித்து நீண்டகாலம் சாளுக்கியர்களுடன் உறவைப்பேண வழிவகுத்தான்.

சமயநிலை இவனுக்கு முன்னிருந்த கங்கமன்னர்கள் வைணத்தை ஆதரித்தனர் ஆனால் துர்விந்தன் சமணமதத்தை ஆதரித்தான்.

முத்தரையர்தொகு

தமிழகத்து வரலாற்றுக் கதாபாத்திரங்களில் முத்தரையர் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன. முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்து வந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

முத்துராஜா இனமக்கள் முடிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோழி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், கங்கைபுத்திரர், கோளி, காபல்கார் என்று கருநாடகத்திலும் அழைக்கப்படுவர். தமிழகத்தில் முத்திராயர் என்றும் முத்திராயன் என்றும் அழைக்கப்படுவர். இந்தியாவின் வட மாநிலங்களில் இம்மக்களை கோளி (Koli) என்றும் அழைப்பர். நாயக்கர் இன மக்கள் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படுவர்

முத்தரையரின் தோற்றுவாய்தொகு

முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி, டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றன. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும் கூறுகின்றனர்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.

தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு(பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு ஏராளமான கல்வெட்டுக்களும் கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.

விஜயல சோழீஸ்வரம் கோவில் இக்கோவில் கி பி 840 இல் இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது. கி பி 852 இல் விஜயல சோழனுக்கும் இளங்கோவதி முத்தரையர்க்கும் நடந்த போரில் விஜயல சோழன் வென்றார்.பிறகு இக்கோவிலுக்கு விஜயல சோழீஸ்வரம் என்று பெயர் சூடினார்.கி பி 865 இல் முத்தரைய மன்னர் மல்லன் வித்துமன் இக்கோவிலுக்கு நன்கொடையும் புனரமைப்பு பணிகளையும் செய்து உள்ளார்.

திருமயம் சத்தியமூர்த்தி கோவில் இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

மலையடிப்பட்டி வாகீஸ்வரர் கோவில் குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது

"https://ta.wiktionary.org/w/index.php?title=களப்பிரர்கள்&oldid=1642686" இருந்து மீள்விக்கப்பட்டது