சட்டம்
சட்டம் - கட்டுப்பாடுகள்
தொகுசட்டம் - கட்டுபாடுகள், விதிமுறைகள்
(ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றுப்பட்டு வாழக்கூடிய மக்கள் தங்களுக்குள் எவ்வித சண்டை, சச்சரவுகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக தங்களுக்கு தாங்களே விதித்து கொள்கின்ற கட்டுப்பாடுகளுக்கு சட்டம் என்று பெயர்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சட்டம், பெயர்ச்சொல்.
- மரச்சட்டம்
- கம்பியிழுக்குங் கருவி
- நகையின் உம்மச்சு
- எழுதும் ஓலை
- எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம்
- நியாய ஏற்பாடு
- செப்பம்
- நேர்மை
- ஆயத்தம் (உள்ளூர் பயன்பாடு)
- காண்க..புனுகுச்சட்டம்
- புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள்
- மாணிக்கவகை
- (எ. கா.) மாணிக்கம் சட்டமும் இலைசுனியும் ஒன்றும் உட்பட ((S. I. I.) ii, 430, 32).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- wooden frame
- perforated metallic frame for drawing wire
- socket in a jewel for insetting gems
- ola used for writing
- plan, model
- rule, order, law, regulation especially written, act
- excellence, superior quality.
- exactness, precision, accuracy, neatness, nicety, propriety
- readiness
- sac or gland in the anal pouch of the civet cat
- fluid extracted from the sac of a civet cat
- A kind of ruby
சொல்வளம்
தொகு- சட்டம் ஒழுங்கு - law and order
- சட்டம்
- சட்டக்கல்லூரி, சட்டமன்றம், சட்டசபை, சட்டச்சிக்கல்
- ஊரடங்கு சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், அச்சகச் சட்டம், எழுதாச்சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]] David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
பயன்பாடு
- அதுவும் வங்கி மேலாளர் என்று பொறுப்பு வரும்போது, விடுப்பு என்றே நினைக்கக் கூடாது என்று எழுதப்படாத சட்டம் என்று ஒன்று கொண்டு வந்து விடுவார்கள்