விக்சனரி:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎Tech News: 2017-10: புதிய பகுதி
அடையாளம்: MassMessage delivery
உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு ''<big>'[[விக்கிப்ப
வரிசை 266:
</div></div> <section end="technews-2017-W10"/> 23:23, 6 மார்ச் 2017 (UTC)
<!-- Message sent by User:Johan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Tech_ambassadors&oldid=16379261 -->
 
== [[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்|செயற்திட்டம் - இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]] ==
தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மொழியின், தமிழ்ச் பேசும் சமூகங்களின் அறிவுத் தளங்களை பதிவு செய்வதில் ஒரு முன்னோடிக் களமாக திகழ்ந்து வந்துள்ளது, வருகின்றது. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நாம் தொகுத்து வருகிறோம். ஆனால் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளைப் பதிவு செய்வதில் தடைகள் உள்ளன. போதிய உசாத்துணை வளங்கள் இல்லாமை, முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லாமை, இணைய இணைப்பு இல்லாமை, ஈடுபாடு கொண்ட பயனர்கள் இல்லாமை என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. இவ்வாறு போதிய கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக மரபுசார் தொழிற்கலைகளும், அவைகளைப் பற்றிய அறிவுத் தளங்களும் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் விக்கியூடக நிறுவனத்தில் ஒரு [https://meta.wikimedia.org/wiki/Grants:Project முன்மொழிவினை] முன்வைத்துள்ளோம். இந்த முன்மொழிவு தமிழ் விக்கி தன்னார்வலர்களாலும், நூலக நிறுவன பங்களிப்பாளர்களாலும், இதர அமைப்புகளின் ஆதரவோடும் முன்னெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றனது. அந்த முன்மொழிவு ஒரு வரைவு மட்டுமே. அந்த முன்மொழிவினை மேம்படுத்த, அந்தச் செயற்திட்டத்தில் பங்ககெடுக்க உங்களை வரவேற்கிறோம்.
 
தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach), விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயற்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம்.
 
இந்தச் செயற்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது.
* முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும். குறிப்பாக தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து.
* இரண்டாவதாக தமிழ்ச் சூழலில் GLAM (https://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM) மற்றும் மரபுரிமைச் செயற்திட்டங்களை (https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage) முன்னெடுப்பது சிக்கல்களும், தடைகளும் மிகுந்தது. எம்மிடம் பலமான நூலக, ஆவணக, அருங்காட்சியகக் கட்டமைப்புக்கள் இல்லாமை இதற்கு ஒரு முக்கிய தடை ஆகும். ஆனால் அந்தக் களங்களை விக்கிக்கும், இணையத்துக்கும் கொண்டுவரும் தேவை மிகையாகவே இருக்கின்றது. அந்தக் களங்களை தமிழ் விக்கியூடகங்களுக்கு கொண்டுவரும் செயற்திட்டமாக இது அமையும்.
* மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயற்திடமாக அமையும்.
 
உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு ''<big>'[[விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்]]</big>''' நல்கவும். நன்றி.
 
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 02:38, 9 மார்ச் 2017 (UTC)
"https://ta.wiktionary.org/wiki/விக்சனரி:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது