தமிழ் தொகு

(கோப்பு)
 
அகழி

பொருள் தொகு

அகழி (பெ)

  • கோட்டையின் வெளிப்புறத்தில் அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் அல்லது

கோட்டையைச் சுற்றி இயற்கையாக அமைந்த நீரரண் அகழி ஆகும்.

  • அகழ்ந்த நீர் கொடும்பள்ளம்.
  • மதில்சூழ்ந்த நீரரண்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம் : moat
  • Protective waterbody around the fort is called moat.
  • பிரான்சியம் : les douves

பயன்பாடு தொகு

  • கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. (சிவகாமியின் சபதம், கல்கி)
  • தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும்,
வென்றித் தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால் (கம்பராமாயணம், யுத்த காண்டம் மீட்சிப் படலம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகழி&oldid=1898333" இலிருந்து மீள்விக்கப்பட்டது