ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குழல், (பெ)

  1. மயிர்க்குழற்சி, கொண்டை
    • குழலுடைச் சிகழிகை (சீவக. 1092)
  2. ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது. (திவா.)
  3. மயிர். (பிங்.)
  4. துளையுடைய பொருள். (திவா.)
  5. இசைக்குழல். (சூடாமணி நிகண்டு)
  6. குழலிசை
    • குழலினிதி யாழினிதென்ப (குறள்., 66)
  7. உட்டுளை
  8. ஒருவகைக் கழுத்தணி. (உள்ளூர் பயன்பாடு)
  9. மீன்வகை
  10. கடல்மீன்வகை
  11. துப்பாக்கி
    • கொட்ட மிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் (கூளப்ப. 90).

குழல், (வி)

  1. சுருளுதல்
    • கடைகுழன்ற கருங்குழல்கள் (சீவக. 164)
  2. சுருட்டி முடிக்கப்படுதல். (W.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

n.

  1. Curling hair
  2. Woman's hair dressed by coiling and tying up behind in a roll, one of aim-pāl, q.v.
  3. Human hair
  4. Any tube-shaped thing
  5. flute, pipe
  6. music of the pipe
  7. tubularity, hollowness
  8. A kind of neck ornament
  9. Milk-fish, brilliant glossy blue, attaining 3 or 4 ft. in length, Chanos salmoneus
  10. A sea-fish, bluish, attaining several feet in length, Seriola bipinnulata
  11. gun

v.

  1. To curl
  2. To be folded back into a roll or tied in a lock, as the hair of women in kuḻal


( மொழிகள் )

சான்றுகள் ---குழல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழல்&oldid=1972641" இலிருந்து மீள்விக்கப்பட்டது