தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஜம்மென்று, உரிச்சொல். .
  1. நன்றாக, சுகமாக, வசதியாக
  2. அழகாக
  3. சுவையாக

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. good
  2. beautiful
  3. tasty

விளக்கம் தொகு

கொச்சை/பேச்சு மொழி...தோற்றம் எவ்வாறு என்று அறியப்படாத தமிழில் வழங்கும் சொற்களில் ஒன்று...பேச்சு வழக்கில் ஜம்முனு என்று பலுக்கும்...நன்றாக இருத்தல், அழகாக இருத்தல், சுவையாக இருத்தல் ஆகிய இயல்புகளைத் தெரிவிக்கும் நடைமுறைப் பேச்சில் பயன்படுகிறது...

பயன்பாடு தொகு

  1. இராகவேந்திரன் வெகு காலத்திற்கு முன்பே தில்லிக்குப்போய் அங்கேயே குடியேறிவிட்டான்...இப்போது நல்ல வேலையில், கை நிறைய சம்பாதிக்கிறான்...கலியாணமும் செய்துக் கொண்டு குடியும் குடித்தனமுமாக ஜம்முனு இருக்கிறான்..(நன்றாக, சுகமாக, வசதியாக இருக்கிறான்).
  2. நம்ம சுந்தருக்கு கலியாணத்திற்குப் பார்த்தப் பெண் ஜம்முனு இருக்கிறாள்...(அழகாக இருக்கிறாள்}.
  3. நேற்று சாப்பிட்ட சுப்புராமன் வீட்டு விருந்து ஜம்முனு இருந்தது...(சுவையாக இருந்தது)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜம்மென்று&oldid=1992288" இலிருந்து மீள்விக்கப்பட்டது