தங்கை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
1. வயதில் இளைய உடன் பிறந்தவள் ( அல்லது தங்கை முறை வரும் உறவினர்). 2. வயதில் இளைய பெண்களையும் முன் பின் தெரியாத இளைய பெண்களையும் கனிவுடன் விளிக்க உதவும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -(younger) sister
- பிரான்சியம் : petite soeur
விளக்கம்
- தம்+ஐயன் - தமக்கு மூத்தவன் - தமையன் (அண்ணன்)
- தம்+அக்கை = தமக்கை - தமக்கு மூத்தவள் - அக்கா
- தம்+பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் பிறந்தவன் - தம்பி
- தம்+கை = தங்கை - தமக்குச் சிறியவள் - தங்கை (கை எனும் சொல் சிறிய எனும் பொருளில் வந்தது.) (மொழிப் பயிற்சி - 21: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 2 சன 2011)