தொண்டன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொண்டன்பெயர்ச்சொல்
- ஒரு மீன் வகை
- தொண்டு செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை "தேசத்தொண்டு' எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை "திருத்தொண்டு" எனப்படும். "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்னும் வாய்மொழி (ஔவையார்) பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
- அன்புத் தலைவா! கழகத்தின் எத்தனையோ செயற் குழுக்களையும், பொதுக் குழுக்களையும் கண்ட தொண்டன் நான்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தொண்டன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி