ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூடகம் (பெ)

  • வெளிப்படையாகத் தெரியாமல், ஊகித்தறியுமாறு மறைமுகமான ஒன்று; மறைமுகம்; மறைபொருள்; மர்மம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • குருமூர்த்தி மனசைக் காட்டாதவன். பெரும் சாடின் துணிபோன்ற புன்னகையுடன் மனசைப் போட்டு மூடியிருந்தான் அவன். கோவில் பிரசாதப் பாத்திரம் போல. அவனிடம் மாத்திரம் தனிச் சலுகை - கரிசனம் காட்டினார் அவர் என்பதை எல்லாரும் விளங்காமல் கவனித்தார்கள்... எல்லாம் பூடகமாக மூடு மந்திரமாக அல்லவா இருந்தது. (கோபுரம் மாறும் பொம்மைகள், எஸ். ஷங்கரநாராயணன் , திண்ணை)
  • பாட்டியின் குத்திட்ட விழிகளும், சில்லிட்டுக்கொண்டிருந்த உடலும், காரில் ஏற்றும்போதே மரணத்தை பூடகமாக உணர்த்தியபோதிலும், உடன்சென்ற ஒவ்வொருவரும், விபரீத கற்பனையென்றே ஒதுக்கித் தள்ளினார்கள். (மாத்தா-ஹரி, நாகரத்தினம் கிருஷ்ணா , திண்ணை)
  • பூடகமாக சொல்வதை விட விளம்பச் சொல்வதைத் தனது உத்தியாகக் கொண்டிருக்கிறார். நுட்பமாகச் சொவதை விட நேர்படச் சொல்வதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். (திண்ணை)
  • எதையும் வெளிப்படையாக எழுதும் போக்கு தமிழ்நாட்டில் இல்லை. எல்லாம் பூடகமாக, ரகசியமாகச் சொல்ல வேண்டும். அதை ஒரு சராசரி வாசகன் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். நடக்கிற கதையா இது ? (திண்ணை)
  • இன்று எழுதப்படும் ஆயிரக்கணக்கான கவிதைகள் வேண்டுமென்றே மர்மமானதும் குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழியில் பூடகமாக எழுதப்படுவதைப் போல் தோன்றுகிறது. (நவீன இலக்கியம்- கடிதங்கள், ஜெயமோகன்)
  • பூடகமாக எழுதி அதை ஆளுக்கொரு திக்கில் பொருள் சொல்லி பாமரனை மேலும் குழப்பவேண்டுமா? (மைய ஓட்டமும் மாற்று ஓட்டமும், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பூடகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புதிர் - மறைமுகம் - இரகசியம் - மர்மம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூடகம்&oldid=1070417" இலிருந்து மீள்விக்கப்பட்டது