மானம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மானம்:
19) barrel-vaulted roof
  1. தன் மதிப்பு
  2. கௌரவம்
  3. கற்பு
  4. பெருமை
  5. புலவி
  6. வலிமை
  7. சபதம்
  8. கணிப்பு
  9. அளவுகருவி
  10. மாற்றாணி
  11. பட்டணம்படியில் அரைப் படி கொண்ட அளவு
  12. ஒப்புமை
  13. பிரமாணம்
  14. அன்பு
  15. தன்மானம்
  16. அபிமானம்
  17. அவமானம்
  18. இலச்சை
  19. குற்றம்
  20. ஆகாய விமானம்
  21. கோவில் விமானம்
  22. மண்டபம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. honour, dignity
  2. chastity
  3. pride, eminence
  4. bouderie, sulks
  5. strength
  6. vow
  7. computation
  8. instrument or means of measurement
  9. touch-needle
  10. half a Madras measure
  11. comparison
  12. test; means of knowledge
  13. love, affection
  14. attachment
  15. disgrace
  16. shame
  17. fault
  18. aerial chariot
  19. vaulted roof of the inner shrine of a temple
  20. pillared hall
விளக்கம்
பயன்பாடு
  • அடி பைத்தியமே உனக்கு மானம், ரோஷம் ஒன்றுமில்லையா? வாதாபியிலேயே எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வந்தாயா? (சிவகாமியின் சபதம், கல்கி)
  • வயதாயிற்றே தவிர உங்களுக்கு மானம், வெட்கம் ஒன்றும் கிடையாது. இப்படித்தானா பேசுவது? (கணையாழியின் கனவு, கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  1. நன்றேகாண் மானமுடையார் மதிப்பு (நாலடியார், 294)
  2. புகழு மானமு மெடுத்து வற் புறுத்தலும் (தொல்காப்பியம். பொ. 41)
  3. மான மங்கையர் வாட்டமும் (சீவக சிந்தாமணி. 2382)
  4. அப்படியே செய்வேனென மானஞ்செய்து (இராம நா. அயோத். 7)
  5. மானமில்லுயர் மணிவண்ணன் (சீவக சிந்தாமணி. 2747)
  6. பாலு நீரும்போல மானம்வைத் தாண்டீரே ((இராமநா. அயோத். 7)
  7. மறத்திடை மானமேற் கொண்டு ((பு. வெ. 5, 6)
  8. மானந்தலைவருவ செய்பவோ (நாலடியார், 198)
  9. வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும் (கம்பராமாயணம். சடாயுவுயிர்நீ. 145)
  10. மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல்காப்பியம்.எழுத். 47)
  11. மானமிசை யூர்ந்து ((கந்தபு. அசுரர்யா. 14)
  12. பொன்மானந் தனக்கு வடமேற்றிசை ((திருவிளை. கல் லானைக். 3)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

மானம்
தன்மானம், அபிமானம், அவமானம்
வருமானம், சேர்மானம், பிடிமானம், சரிமானம், சாய்மானம், தீர்மானம்
மனம், உயர்வு, மேன்மை, வௌவானத்தி, மண்டபவீடு

ஆதாரங்கள் ---மானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானம்&oldid=1969117" இலிருந்து மீள்விக்கப்பட்டது