மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js

மணல்தொட்டி பெயர்மாற்றம் தொகு

  • புதியவர்களுக்கு 'மணல்தொட்டி' என்ற வழமையான பெயரை விட, 'பயிற்சியிடம்' என்ற பெயர், தயங்காமல் செயற்பட தூண்டும் என்பதால் அப்பெயருக்கு மாற்ற விரும்புகிறேன். உங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 18:04, 25 பெப்ரவரி 2014 (UTC)

ஆதரவு தொகு

  1. --தகவலுழவன் (பேச்சு) 00:15, 26 பெப்ரவரி 2014 (UTC)
  2. --Jambolik (பேச்சு) 00:23, 26 பெப்ரவரி 2014 (UTC)
  3. --ராஜு சரவணன் (பேச்சு) 17:23, 3 மார்ச் 2014 (UTC)
  4. --ச.பிரபாகரன் (பேச்சு) 04:10, 16 மார்ச் 2014 (UTC)
  5. --பாலாஜி (பேச்சு) 05:51, 20 திசம்பர் 2014 (UTC)Reply
  6. --சிவசுப்பிரமணியன் (பேச்சு) 18:19, 20 திசம்பர் 2014 (UTC)Reply

இது சரியான ஒரு தேர்வு

மறுப்பு தொகு

கருத்துக்கள் தொகு

  1. 'மணல்தொட்டி' என்றால், என்ன? எதற்கு? என்று படித்தவுடன் புரியாத சொற்றொடர்தான்...ஐயமில்லை...'பயிற்சியிடம்' என்பது தக்கச் சொல்தான்...'பயிற்சி பெறுக'என்ற சொற்கள் இன்னும் நேரிடையாகச் சொல்லி, செயற்பட தூண்டும் என்பதாக அமையும் என்று எண்ணுகிறேன்...ஒரு யோசனைதான்!--Jambolik (பேச்சு) 18:54, 25 பெப்ரவரி 2014 (UTC)
  2. திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழக்த்தின் தமிழ்துறையில் மொழியியல் குறித்தும், இணையத்தமிழ் குறித்தும் பயிலரங்கு27பிப்2014-3மார்ச்சு2014வரை நடக்கிறது. அதில் தமிழ் விக்கித்திட்டங்களைப் பற்றியும் அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதில் தேவையான அறிமுகங்களை நான், தேனீசுப்பு, சூரியா தந்தோம். தமிழ்விக்கித்திட்டங்களுக்கு மட்டும் பயிலரங்கு தனியே நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். பேராசியர்களிடமும், ஆய்வு மாணவர்களிடமும் இதுபற்றி கலந்தபோது, விக்கியின் பல்வேறு நிலைகள் புரிந்தது. இப்பெயரை அவர்கள் மணற்பலகை, பயிற்சிக்களம், பயிலுமிடம் என்றும் மாற்றலாம் என்று தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.இடைமுகத்தில் இருந்த ஓரிரு சந்திப்பிழைகளையும் சுட்டிக்காட்டினர்.விரைவில் உரிய மாற்றங்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்படும். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 04:11, 3 மார்ச் 2014 (UTC)
  3. நம் கலாசாரத்திலும் மணலில் எழுதிப் பழகிய வழக்கம் இருந்திருக்கிறது. ஆகவே, "மணல் தொட்டி" என்பதை "மணற்பரப்பு" என மாற்றலாம். தாங்கள் கூறுவது போல, "பயிற்சியிடம்" என்கிறச் சொல் புது வருகையாளர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் இருக்கும் என்பது உண்மையே. அப்படியானால், பயிற்சியிடம் என்பதைச் சிறிது மாற்றி, "பயிற்சிக் களம்" என வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். (தினகர்)
  4. தமிழில் பயில்வது, பழகுவது என பொருள் கொண்ட சொற்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்த என்ன தயக்கம் என்று தெரிவில்லை. அனைத்திற்கும் ஆங்கிலத்தையே நம்பி அதன் பின்புறமே செல்வதற்கு எனக்கு உடன்பாடில்லை. மணல் தொட்டி என்பது அவர்கள் அவர்களுடைய மொழிக்கு சரியாக வரும் பதம். நாமும் அவர்களை போன்றே அப்படியே ஒவ்வொரு சொற்களையும் மொழிமாற்றம் செய்து பயன்படுத்தவது, நம் மொழியின் சிதைவுக்கு தான் வழிவகுக்கும். sandbox என்றால் என்ன பொருளை சொல்கிறது என பார்த்து அதே பொருள் தரும் தமிழ் சொல்லை பயன்படுத்த வேண்டும். மணல் தொட்டி என்ற சொல்லுக்கு பதில் 'பயிற்சியிடம்' என்ற சொல் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.--ராஜு சரவணன் (பேச்சு) 17:18, 3 மார்ச் 2014 (UTC)
  5. பயிற்சியிடம் எனும் வார்த்தை புதுப்பயனர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் இருக்கிறது. மணற்பரப்பு, மணற்பலகை, பயிற்சிக்களம் என்ற சொற்களும் நன்றாக உள்ளது. பயிலுமிடம், பயிற்றிடம் ஆகிய சொற்கள் கற்றுக்கொடுக்கும் இடம் எனும் பொருளிளும் உள்ளது போல் தோன்றுவதால் பயனர்கள் குழப்பமடையலாம். தெரியாததை/சந்தேகத்தை/கற்றுக்கொண்டதைச் சோதித்துப் பார்க்குமிடம்/பயிற்சி செய்யும் இடம் எனும் பொருள்களில் இருந்தால் குழப்பங்கள் வாரா. Slate/Black Board/Rough Note எனும் பொருள்களிலும் சொற்களை உருவாக்கலாம். மணற்தொட்டி என்பது ஒவ்வொரு பயனருக்கும் தனியானது என்பதால் மேலே உள்ள வரிசையில் காண்பிக்கும் பொழுது மட்டும் என் எனும் சொல்லை முன்னே சேர்த்துக்கொள்ளலாம்(My Talk, My Sandbox என்பதைப்போல). --ச.பிரபாகரன் (பேச்சு) 04:10, 16 மார்ச் 2014 (UTC)
  6. Sorry. I am typing in English. This discussion is based on one of the meaning of sandbox which is for practicing and experimenting. But the deeper and clearer meaning of sandbox as I understand is that, whatever changes is being done in sandbox it is within that and it doesn't affect other pages. That is the reason they used 'sandbox' instead of say 'practice area' or something else. I am sure "மணல் தொட்டி" is not conveying the meaning properly to Tamil users. It's apt to explore better words than "மணல் தொட்டி".பாலாஜி (பேச்சு)
  7. விக்சனரிக்கு வரும் புது பயனர்களுக்கு மணல்தொட்டி என்ற சொல் குழப்பத்தை தான் ஏற்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. பயிற்சிக்களம் தவிர எனக்கு தோன்றும் சில வார்த்தைகள் - பயிற்சிக்கூடம், சோதனைக்களம் (வார்த்தைகளை சோதித்து பார்ப்பதனால்), சோதனைக்கூடம். இன்னும் தெளிவாக புரிய வேண்டுமென்றால் பயிற்சி செய்து பார்க்க, சோதித்து பார்க்குமிடம் என்று விரிவாகவும் மொழிபெயர்க்கலாம். மொத்தத்தில் ஒவ்வொரு மொழி பெயர்ப்பும் தமிழ் தொன்மையையும்,தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தால் நன்று.--சிவசுப்பிரமணியன் (பேச்சு) 18:19, 20 திசம்பர் 2014 (UTC)Reply

முடிவு தொகு

Return to "Gadget-mySandbox.js" page.