தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வீட்டுவரி, பெயர்ச்சொல்.
  1. வீட்டுத்தீர்வை
  2. மனைவரி
  3. சொந்த வீட்டுக்காக கட்டப்படும் வரிப்பணம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. house tax,

விளக்கம்

தொகு
  • சொந்த வீடு|வீடுகள் வைத்திருப்பவர், உள்ளூர் நிருவாகத்தினால் அந்தந்த வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட, ஆண்டுக்கொரு முறை கொடுக்கும் பணத்தொகை வீட்டுவரி எனப்படும்..சொத்துவரி என்னும் பொதுப்பெயரில் வீட்டுவரியும் அடங்கும்...
  • வீட்டு வரித்தொகை உள்ளூர்/நகர/மாநகர நிர்வாகத்திற்கே உரிய நிதியாகும்...இவ்வாறு வசூலிக்கப்பட்ட பலவகை வரிப் பணத்தைக்கொண்டுதான் நிர்வாகம் அந்தந்த ஊர்கள்/நகரங்களின் முன்னேற்றத்திற்குத் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றுகிறது...
  • வீட்டுவரி வீட்டின் பரப்பளவு, வீட்டின் கட்டுமான வகை, வீடு உள்ளப் பகுதி, வீட்டின் பயன்பாடு போன்ற பலவிதக் கூறுகளைப்பொருத்து வேறுபடும்...பயன்பாடு என்பது, வீட்டின் சொந்தக்காரரே அந்த வீட்டில் வசிக்கிறாரா?, அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளதா?,வீடு வியாபாரம் செய்ய பயனாகிறதா? போன்றப் பகுப்புகளாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீட்டுவரி&oldid=1446010" இலிருந்து மீள்விக்கப்பட்டது