(ரேகையிற் கனிகொள்

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் "ரேகையிற் கனிகொள்" என்ற பதம் வருகிறது. இதற்குப் பொருள் னான் தேடிய வரையில் சரியாகத் தெரியவில்லை. எனக்குச் சரியாகத் தோன்றும் பொருள் வருமாறு: (1) அட்சரேகை, தீர்க்கரேகை என்பதைக்குறிப்பிடுவதானால், "அவரவர் இடத்தில் விளையும் கனிகளைக் கொள்வது சிறன்தது" என்று கூறுவதாக அமைகிறது. அறிவியல் படியும் இது சரியாக இருக்கிறது (2) இராமாயணத்தில் சீதாபிராட்டி, இலக்குவன் கிழித்த கோட்டைத் தாண்டிச் சென்றதால் விளைன்த ஆபத்தைக்குறிப்பிடுவதாக அமையுமானால், "எல்லை தாண்டாதே" என்றும் "கொள்வதென்றால் அதற்கொரு எல்லையை வகுத்துக்கொள்" என்றும் தோன்றுகிறது. வெளிச்சம் கொடுப்பாருண்டோ?

"https://ta.wiktionary.org/w/index.php?title=(ரேகையிற்_கனிகொள்&oldid=1640587" இலிருந்து மீள்விக்கப்பட்டது