பொருள்

தொகு
  1. ஓசிஎக்ஸ்

விளக்கம்

தொகு
  1. ஓஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்.ஓஎல்இ மற்றும் காம் தொழில் நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப் பயன்பாட்டுக்கு விரும்புகின்ற சில பண்புக் கூறுகளை அளிக்கும் ஒரு கட்டுப்பாட்டினை இது உருவாக்கித் தருகிறது.ஓசி எக்ஸ் தொழில்நுட்பம் வேறுபட்ட பணித்தளங்களில் செயல்பட வல்லது. 16-பிட், 32 பிட் இயக்க முறைமைகளிலும், பல் வேறுபட்ட பயன்பாடுகளிலும் பயன்படுத்தவல்லது. விசுவல் பேசிக் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடிந்த விபிஎக்ஸ் (Visual Basic Custom Control) தொழில்நுட்பத்தின் வாரிசாக வந்தது.ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்பத்தின் அடிப் படையாக விளங்குவது.ஓசி எக்ஸ்-கள் விசுவல் சி++ மொழியில் எழுதப்பட்டாலும் வேறு பல மொழிகளிலும் எழுத முடியும்.1996 ஒஎல்இ கன்ட்ரோல் வரன்முறையில் இடம் பெற்றுள்ள ஒசிஎக்ஸ் தொழில் நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ΟCΧ&oldid=1910862" இலிருந்து மீள்விக்கப்பட்டது