அகங்காரம்,.

  1. தான் என்ற எண்ணம்
  2. செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம்.[1]
  3. செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்[2]

விளக்கம்

தொகு
  • அகம் = நான், காரம் = உச்சரிப்பு => நான் என்ற உச்சரிப்பு.
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • காரம் என்றால் கோபம் என்று பொருள். மனதின் உள்ளே காரத்தை வைத்துக்கொண்டு வாழ்தல் என்று பொருள்.

இவர்கள் "தான்" என்ற அகந்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது பிறரை புரிந்து கொள்ளாதவர்களாக மற்றும் புரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

  • இந்த குணாதிசயத்தை "அகங்காரம்" என்று சொல்லுவார்கள். இந்த குணத்தையுடைவர்களை அகங்காரி அல்லது அகங்காரன் என்று சொல்லுவார்கள்.
  • இந்த வார்த்தையை பயன்படுத்தும் விதத்தை இந்த வாக்கியத்தின் மூலம் பார்க்கலாம்:

"தன்னுடைய வீட்டில் வேலை பார்க்கும் சமையல்காரன் சாம்பசிவத்தின் மகன் விக்கிரமன் அகில இந்திய போட்டி தேர்வில் கலந்து கொண்டு நாட்டிலே முதல் மாணவனாக வந்ததை தெரிந்து கொண்ட ஸ்வாமிநாதன் மனதில் உறங்கிக்கொண்டிருந்த அகங்காரம் தலை தூக்க, எப்படியாவது சாம்பசிவத்தை திருடன் என்று சொல்லி பழி தீர்த்துக்கொள்ள விரும்பினான்."

மொழிபெயர்ப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5
  2. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகங்காரம்&oldid=1997231" இலிருந்து மீள்விக்கப்பட்டது