அகம் என்றால் வீடு...அகம் + காரர் = அகத்துக்காரர்...பேச்சு வழக்கில் ஆத்துக்காரர்...ஒரு திருமணமான பெண் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு சொல்...அவளுடைய கணவனைக் குறிக்கும்...
அகம் என்றால் மனம் என்றும் பொருள் கொள்ளலாம். என் மனத்துக்குரியவர். என் மணாளன். அதனால் என்னுடைய அகத்துக்காரர்
அகம் என்றால் உள்ளே என்று பொருள்; புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது உள்ளே இருப்பவர்- மனதின் உள்ளே இருப்பவர். திருமணம் செய்த பின்னர், மனதின் உள்ளே (அகத்திற்குள்) பிரதானமாக இருப்பவர் - கணவர். எனவே கணவரை குறிப்பதற்கு அகத்துக்காரர் என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். இதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வெகு காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.