அகப்பை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பெயர்ச்சொல்
- செரட்டையில் செய்யப்பட்ட கரண்டி
- குழிந்த ஒருவகைக்கரண்டி; மரக்கரண்டி;
விளக்கம்
தொகு- செரட்டையில் ஒரு இரண்டு அடி நீளமுள்ள கம்பை சொருவி வைத்திருப்பார்கள். செரட்டை என்பது காய வைத்த தேங்காய் ஓட்டின் அரை பாகம். தற்போது நாம் பயன்படுத்தும் கரண்டி தான் அது. இந்த வாக்கியத்தை பார்க்கலாம்:
"வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் முன்பாக விரித்திருந்த இலையில் குவித்து வைத்திருந்த சோற்றின் மேல் ஒரு அகப்பை மோர் குழம்பை எடுத்து ஊற்றினான், ராமன்"
- கிராமங்களில் இன்றும் மரக்கரண்டிகள் பயன்படுத்துகிறார்கள். அவற்றை அகப்பைகள் என்று சொல்லுவார்கள்.
இந்த வார்த்தையின் பயன்பாடு: 01. பொங்கலன்று, வீட்டின் முன்புறம் கோலம் வரைந்து, ஏற்கனவே கொண்டு வந்திருந்த அடுப்பின் மேல் பானையை வைத்து, அரிசி, சர்க்கரை போன்றவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி அதன் பின்னர், நெருப்பினால் அடுப்பை எரிய விடும்போது தான் தெரிந்தது, கமலாவுக்கு, பொங்கலை கிளறுவதற்கு அகப்பை கொண்டுவரவில்லையென்று. 02. சோறு வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு, சோற்றுப்பானைக்குள் அகப்பையை விட்டு, கிளறி, சிறிதளவு சோறு எடுத்து, விரல்களினால் பதம் பார்ப்பார்கள்.
பயன்பாடு
தொகு- சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
மொழிப்பெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a ladle