அதிகரசம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅதிகரசம், .
- ஒரு சம்பிரதாய தமிழ் இனிப்புத் தின்பண்டம்.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்--வட மொழி...வடமொழியில் பெயர் சூட்டிக்கொண்ட தமிழ் இனிப்புத் தின்பண்டம்...பேச்சு வழக்கில் அதிரசம்...அதிக என்றால் மிகுந்த என்றும் ரசம் என்றால் சுவை என்றும் பொருள்பட உண்டானது...பச்சை அரிசி மாவு, வெல்லம், எண்ணெய் அல்லது நெய் இவைகளே தலையாய உட்பொருட்கள்...தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று...பழைய முறைப்படி, (நவீன உபகரணங்களைப் பயன்படுத்தாமல்), உழைத்துச் செய்யப்பட்டால் இந்த அதிரசத்தின் சுவைக்கு ஈடு இணையே இல்லை...தயார் செய்ய முக்கியப் பொருளான அரிசி மாவு, சற்றேத் தண்ணீரில் ஊறி, நிழலில் கொஞ்ச நேரம் நீர் போக உலர்த்தப்பட்டப் பச்சரிசியை உரல், உலக்கைக்கொண்டு இடித்துப் பொடியாக்கிச் சலித்து எடுத்ததாகவும், பொரிக்கும் எண்ணெய் கடலை எண்ணெய்யாகவோ அல்லது நெய்யாகவோதான் இருக்க வேண்டும்...விறகு அல்லது கரி அடுப்புத் தீயில் எண்ணெயை சூடாக்கி அதில் அதிரசம் சுட ரசம் கூடும்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a traditional tamil fried sweetmeat made of rice flour, jaggery and ghee or peanut oil
( மொழிகள் ) |
சான்றுகள் ---அதிகரசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி