அத்திப்பூத்தாற்போல
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅத்திப்பூத்தாற்போல, (உரிச்சொல்).
- அரிதாக
- அதிசயமாக
விளக்கம்
தொகு- எல்லாவித செடி கொடிகளும் மரங்களும் மலர்வதை/பூப்பதைக் காணமுடியும்...ஆனால் அத்தி மரம் பூப்பதைக் காணமுடியாது...பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரவகையைச் சேர்ந்தது அத்தி ஆகும்...ஆகவே அத்திப்பூக்களை எந்நாளும் பார்க்கவே முடியாது...எனவேதான் அரிதாக, அதிசயமாக நடக்கும் நிகழ்வுகளை அத்திப்பூத்தாற்போல என்றுக் குறிப்பிடுவார்கள்...இவ்வாறு பூக்காமல் காய்க்கும் மரங்களான அத்தி, ஆல், பலா, அரசு முதலிய மரவகைகளை பழந்தமிழில் கோளி என்று சொல்வர்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- rarely
- surprisingly
பயன்பாடு
தொகு- முகுந்தன் வாத்தியார் பெரிய ஆள்...யார் வீட்டிற்கும் சட்டென்று போய்விடமாட்டார்...என்னவோ 'அத்திப்பூத்தாற்போல' என் வீட்டிற்கு வரப்போகிறேன் என்று சொன்னார்...சீக்கிரம் போகவேண்டும்...போகவிடுங்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அத்திப்பூத்தாற்போல--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி