அத்திரம்
தமிழ்
தொகு
|
---|






பொருள்
தொகுஅத்திரம், பெயர்ச்சொல்.
- மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட போர் ஆயுதங்கள்
- குதிரை/போர் குதிரை
- கழுதை
- ஏவுகணைa
- நிலையற்றது
- மலை
- இலந்தை
- வில்
- குங்கிலியம்
- கடுக்காய்ப்பூ
- இஞ்சி
- அம்புக்கூடு/அம்புக்கட்டு
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...அஸ்த்ரம் என்ற சொல்லிலிருந்து..வாள்,கேடயம்,ஈட்டி, சூலம், வில்,அம்பு, கதை போன்ற போரில் பயன்படும் பண்டைய ஆயுதங்கள்...அத்திரம், சத்திரம் என புராணக்கால போர் ஆயுதங்கள் இரண்டு வகைப்படும்... ஆயுதத்தின் வலிமை, அதை ஏவுகிறவனின் திறமை ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே இல்லாமல் சில மந்திரங்களை உச்சரித்து ஓர் ஆயுதத்தின் சக்தியை அதிகப்படுத்தி போரில் பயன்படுத்தும்போது அந்த ஆயுதம் அத்திரம் எனப்படுகிறது...ஆக மந்திர சக்தியோடு பிரயோகிக்கப்படும் ஆயுதமே அத்திரமாகும்.
- இதுவன்றி மேற்கண்ட பொருள் அத்தனைக்கும் வடமொழியில் மூலச்சொற்களைக்கொண்டது...