அனிச்சைச் செயல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • அனிச்சைச் செயல், பெயர்ச்சொல்.
  1. நமது மூளையின் கட்டளையின்றி செய்யப்படுகின்ற செயல்தான் அனிச்சை செயல். தும்மல், விக்கல் போன்றவை.

இச்சை செயல் என்றால், விரும்பி செய்வது; அனிச்சை செயல் என்றால், நம்மை அறியாமல், தாமாக இயங்குவது. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம்... நம்மை, ஒரு கொசு கடிக்கிறது; உடனே, 'பட்'டென்று அந்த இடத்தில் அடிக்கிறோம். மறுநாள் காலையில், உடலில், உடையில், கொசு சிந்திய ரத்தத்தை பார்க்கிறோம். எப்படி வந்தது இந்த ரத்தத் துளி! 'தூக்கத்தில் நம்மை அறியாமல் நாம் செய்த மென் கொலை...' என்பது புரிகிறது. நம் தூக்கம் கலையவில்லை; நாம் கொசுவை அடித்தது, நமக்கே தெரியவில்லை. இதைத் தான், அனிச்சை செயல் என்கிறோம்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. reflex action





( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனிச்சைச்_செயல்&oldid=1893839" இலிருந்து மீள்விக்கப்பட்டது