அறிவுக்கொழுந்து

பயன்படாத கொழுந்து இலை
பயன்படும் இலை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அறிவுக்கொழுந்து, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. அறிவிலி
  2. அறிவில்லாதவர்
  3. புத்தியில் வளராதவர்
  4. மந்தபுத்தியுடைவர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a fool
  2. a person lacking in judgment or prudence

விளக்கம் தொகு

பேச்சு வழக்கு...இது ஒரு வஞ்சப்புகழ்ச்சி சொல்...அறிவில்லாதவன், புத்தியில்லாதவன் என்று பொருள்...அறிவின் + கொழுந்து என்ற சொற்களாலானது....செடி, கொடி மரம் இவற்றின் இலையின் தொடக்க நிலை கொழுந்து எனப்படும்...இந்தக் கொழுந்து நிலையைக் கடந்து முழு இலைகளாகும்போதுதான் உணவுக்கான கீரையாகவும், மருந்துகளுக்காகவும், இன்னும் பிற காரியங்களுக்கும் பயன்படும்...வளர்ச்சியடையாத கொழுந்துகள் எதற்கும் பயன்பட மாட்டாது...அவ்வாறே வளர்ச்சியடையாத கொழுந்துநிலை அறிவுடையவர் எந்த காரியத்திற்கும் பயன்படாத முட்டாள், அறிவிலி என்பதைத் தெரிவிக்கும் சொல்லே அறிவுக்கொழுந்து என்பதாம்...வடமொழியிலும் இத்தகைய ஒரு சொல் பண்டித புத்ர...என்னவோ, பண்டிதனின் மகன் என்று புகழ்கிறார்கள் என்று நினைத்தால், அப்படியில்லை...முட்டாள் என்றே பொருள்...

பயன்பாடு தொகு

வாடா, என் அறிவுக்கொழுந்தே!....எனக்கு முன்பே தெரியும்...நீ இப்படி காரியத்தைச் சொதப்பி விடுவாயென்று!...நான் எச்சரித்ததை எவரும் கண்டுக்கொள்ளவில்லை...அனுபவிக்கட்டும்!!
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிவுக்கொழுந்து&oldid=1216099" இலிருந்து மீள்விக்கப்பட்டது