அள்ளக்கொள்ள
அள்ளக்கொள்ள
சொல் பொருள்
அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு. கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு.
விளக்கம்
“அள்ளக் கொள்ள ஆள் வேண்டும்” என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர் .மழை போலும் நெருக்கடியான வேளையானால் ஒருவர்க்கு ஒருவர் கூப்பிடாமலே கூடிவந்து அள்ளக்கொள்ள முந்துவர்.
அள்ளிக்குவித்தல், களத்து வேலை; கொள்ளுதல் சேர்த்தல், களஞ்சியத்து வேலை.