ஆமணக்கு இலை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
*Ricinus Communis--Leaves--(தாவரவியல் பெயர்)
ஆமணக்கு இலை, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- leaf of castor plant
மருத்துவ குணங்கள்
தொகுஆமணக்கின் இலையால் காமாலை, மூலக்கடுப்பு, வயிற்று வலி நீங்கும்...குழந்தைகளுக்குப் பாலூட்டும் பெண்களுக்குப் பாற்சுரப்பு உண்டாக்கும்...
பயன்படுத்தும் முறை
தொகு- ஆமணக்கு இலையின் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்பனலில் வதக்கிப் பால் வற்றியப் பெண்களின் முலைகளுக்கு வைத்துக்கட்ட பாற்சுரப்பு உண்டாகும்...
- இந்த இலையை சிறு சிறு துண்டுகளாக அரிந்து சிற்றாமணக்கு நெய் விட்டுப் பிசறி வதக்கி சீலையில் முடிச்சுக் கட்டித் தாளக்கூடியச் சூட்டில் ஆசனத்திற்கு ஒற்றடம் கொடுத்து, பின்னர் அந்த இலையையே ஆசனத்தில் வைத்துக்கட்டினால் மூலக்கடுப்பு நீங்கும்...
- இதே முறையில் தயாரித்த சூடான இலையைக் கீல்வாதங்களுக்கும், வாதரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுத்து, அதனையே வைத்துக்கட்ட நன்மையுண்டாகும்...
- துளிர் இலையைச் சிற்றாமணக்கு நெய் தடவி, அனலில் வாட்டி, உந்தியில் வைத்துக்கட்ட வயிற்றுவலி போகும்..
- இதன் இலையோடு சமனளவு கீழ்க்காய்நெல்லி இலையைக் கூட்டி அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவு காலையில் தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் கொடுத்து, நான்காம் நாள் சுகபேதி சூரணம்..[1]..கொடுத்தால் காமாலை குணமாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆமணக்கு இலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி