இசகுபிசகாக ஏமாறுதல்

இசகுபிசகாக ஏமாறுதல்

சொல் பொருள்

இசகு (இசைவு) – ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு (தவறு) – தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல்.

விளக்கம்

எந்த ஒரு குற்றத்திலாவது வன்பு துன்புகளிலாவது மாட்டிக் கொண்டவர், ‘இசகுபிசகாக மாட்டிக்கொண்டேன்’ என்பது வழக்கு. வெள்ளறிவுடையான் பிறர் ஏமாற்றுக்கு ஆட்பட்ட போது அவனைப் பிறர் இசகு பிசகாக ஏமாறிப் போனான் என்பதும் வழக்கு.

ஒருவரைத் தம்பால் வயப்படுத்தி அவரிடம் உள்ளவற்றைத் தட்டிப் பறித்தற்குத் தணியா ஆர்வமுடையவர் என்றும் உண்டன்றோ? அவர்க்கு வயப்பட்டு உள்ளதை உரியதை இழந்து ஓலமிடுவாரும் என்றும் உண்டன்றோ! இவர்கள் வழியாக வழங்கப் பெறும் இணைச் சொல் இது

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசகுபிசகாக_ஏமாறுதல்&oldid=1913243" இலிருந்து மீள்விக்கப்பட்டது