இஞ்சிலேகியம்

தமிழ் தொகு

 
இஞ்சி
 
சீனி சர்க்கரை
 
தேன்
 
நெய்

பொருள் தொகு

  • இஞ்சிலேகியம், பெயர்ச்சொல்.
  1. ஓர் இஞ்சி மருந்து..[1]


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. injilegiyam...a native medicine made of ginger, honey,sugar & ghee etc.,


இஞ்சிலேகியத்தால் தீரும் பிணிகள் தொகு

இந்த இலேகியத்தால் காசம், கபம், வெள்ளோக்காளம், சந்நிபாதசுரம், பேதி, வாதசூலை, வாதகோபம் ஆகியப் பிணிகள் போகும்...மிகுந்த பசிதீபனம் ஏற்படும்...


இலேகியம் செய்முறை தொகு

இஞ்சியின் மேற்றோலைச் சீவிப் பொடிப்பொடியாக அரிந்து அகலமான மூங்கில்/பீங்கான் தட்டில் போட்டு வெய்யிலில் சுக்காக உலர்த்தி இடித்துச் சூரணம் செய்துக்கொள்ளவும்...இந்தச்சூரணத்தில் 5 பலம், திப்பிலி, கிராம்பு, ஏலம், சீரகம், மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, கோஷ்டம், கடுக்காய், தாளிசபத்திரி, சிறுநாகப்பூ, அதிமதுரம் இவைகளின் சூரணம் வகைக்கு அரை பலம் ஆகியவைகளை ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்...(மொத்தம் 13 சரக்குகள்)...பிறகு அரை வீசை சீனி சர்க்கரையை நீர்விட்டுக் கரைத்து வடிகட்டி அடுப்பிலேற்றிக் கொதிக்கவைத்து பாகுபதம் வரும்போது ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சூர்ணங்களின் கலவையை அந்தப்பாகில் கொட்டிக் கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிட்டுப் போதிய அளவு நெய், தேன் விட்டுப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்...இதுவே இஞ்சிலேகியம் ஆகும்...இதனை வேளைக்கு கழற்சிக்காய் அளவு அந்தியும் சந்தியும் கொடுத்துவர பசிதீபனத்தை உண்டாக்குவதோடு மேற்சொன்னப் பிணிகளும் நீங்கும்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=இஞ்சிலேகியம்&oldid=1233670" இலிருந்து மீள்விக்கப்பட்டது