இடிக்கொள்ளு
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடிக்கொள்ளு, பெயர்ச்சொல்.
- காட்டுக்கொள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- Cassia absuus (தாவரவியல் பெயர்)
- ஆங்கிலம்
- Black horse-gram
மருத்துவ குணங்கள்
தொகுஇடிக்கொள்ளால் படர்தாமரை, ஆண்குறிகளில் உண்டாகும் விரணம்,கண்ணோய், மலக்கட்டு ஆகிய இவைகள் போகும்...
உபயோகிக்கும் முறை
தொகு- இடிக்கொள்ளின் விதைகளை ஒரு தேயாத சந்தனக்கல்லின்மீது இரண்டொருத் துளி சுத்தநீர் விட்டு உறைத்துக் கண்களுக்கு அஞ்சனமாகத் தீட்டக் கண்பார்வை அதிகமாகும்...
- இதை நன்றாக மைபோல அரைத்துச் சீலையில் தடவி ஆண்குறியில்வரும் விரணங்களுக்குமேல் அழுந்தப் போட்டுவைத்தால் விரணம் ஆறும்...
- இதன் சுத்தமான மாவைக் கருகாமல் நெருப்பனலில் சிறிது வெதுப்பி கண் இரப்பைகளில் ஓர் உளுந்து அளவுத் தூவிவந்தால் சீழ் பிடித்த விரணங்கள் ஆறும்...
- இதனைப் பழச்சாறுவிட்டு அரைத்துப் படைகளுக்குத் தடவ ஊறல் அடங்கி ஆறிவிடும்...
- இதனை வேகவைத்து எடுத்த நீரில் போதிய அளவு உப்பு, புளி, மிளகாய்க் கூட்டி இரசம் செய்து, தாளித்து, பெண்கள் சாதத்தில் உபயோகப்படுத்தினால் முலைப்பால் சுரக்கும்...[1]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +