இரகுபதி
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
இரகுபதி, .
பொருள்
தொகு- இறைவன் இராமபிரான்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord rama, a hindu god, as born in raghu lineage/pedigree
விளக்கம்
தொகுஇராமாயண நாயகன் இராமன் இரகு வமிசத்தில் பிறந்தமையால் அவருக்கு இரகுபதி என்று பெயர்...வடமொழியில் पति...ப1- தி2- என்றால் தலைவன், நாயகன் என்ற பொருட்களும் உண்டு...இரகு வமிசத்திலேயே மிகப்புகழ் பெற்ற தலைவன்/நாயகன் ஆனதால் இராமனையே இரகுபதி என்னும் பெயர் சுட்டியது...இரகு வமிசத்தையே சூரிய வமிசம் என்றும் சொல்லுவர்...ரகு..(रघु...ரகு4-)என்னும் வடமொழிச் சொல்லுக்கு பெரும்வெளிச்சம் என்னும் பொருளுமுண்டு...அத்தகைய வெளிச்சத்தைக் கொண்டவர் சூரியன் என்பதால் சூரியவமிசத்தையே இரகுவம்சம் என்றனர்...மேலும் இராமனின் கொள்ளுத்தாத்தாவான சூரியவமிசத்தவரான இரகு சக்கரவர்த்தியின் காலத்தில்தான் அந்த நாடு மிகப்பரவி தெற்கே காவிரி வரை நீடித்து நிலைகொண்டது...அதனாலும் சூரியவமிசம் இரகு வமிசம் எனப்பட்டது எனலாம்...