இருபீனைல் ஆக்சலேட்டு

இருபீனைல் ஆக்சலேட்டு (Diphenyl oxalate) என்பது C6Fe2O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் வணிகப்பெயர் சையலும் ஆகும். ஒளிர்குச்சியைப் போல ஒளியுமிழும் இவ்வகை வினைக்கு திண்ம நிலை எசுத்தரான இச்சேர்மத்தின் ஆக்சிசனேற்ற விளைபொருட்கள் காரணமாகின்றன. பீனாலுடன் ஆக்சாலிக் அமிலம் சேர்க்கும் எசுத்தராக்கல் வினைமூலமாக இருபீனைல் ஆக்சலேட்டைத் தயாரிக்கலாம். இச்சேர்மம் ஐதரசன் பெராக்சைடுடன் வினைபுரியும் பொழுது பீனால் மற்றும் 1,2-இருவாக்சிடேன்டையோன் ஆகியனவற்றைக் கொடுக்கிறது [1]. இது சாயமாக கிளர்வுற்று கார்பன் டை ஆக்சைடாக சிதைவடையும் போது ஒளியனை வெளிவிடுகிறது.

அமிலக்காரக் குறியீடு (pH) மதிப்பைச் சார்ந்து வேதிவினை வீதம் மாறுபடுகிறது. வலிமை குறைந்த காரத்தைச் சேர்ப்பதால் சிறிதளவு காரத்தன்மை அளவை அடையமுடியும். உதாரணமாக, சோடியம் சாலிசிலேட்டு பிரகாசமான ஒளியை உற்பத்தி செய்யும். ஆக்சாலிக் அமிலத்தின் எசுத்தரான 2,4,6 முக்குளோரோபீனால் திண்ம நிலையிலும் பயன்பாட்டிற்கு எளிமையாகவும் இருக்கிறது. மேலும் பீனால் எசுத்தருடன் ஒப்பிடுகையில், இது எளிமையான ஒரு விடுபடும் குழுவாகவும் செயல்பட்டு வினையை துரிதப்படுத்துவதோடு பிரகாசமான ஒளியையும் உற்பத்தி செய்கிறது.. வெவ்வேறு வகையான சாயங்களைப் பயன்படுத்துவதால் பின்வரும் நிறங்கள் உற்பத்தியாகின்றன.

Color Compound
நீலம் 9,10-இருபீனைல் ஆந்தரசீன்
பச்சை 9,10-பிசு(பீனைலெத்தினைல்)ஆந்தரசீன்
மஞ்சள்-பச்சை டெட்ராசீன்
மஞ்சள் 1-குளொரோ-9,10-பிசு(பீனைலெத்தினைல்)ஆந்தரசீன்
ஆரஞ்சு 5,12-(பீனைலெத்தினைல்)நாப்தாசீன், உரூப்ரீன், உரோடாமைன் 6கி
சிவப்பு உரோடாமைன் பி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இருபீனைல்_ஆக்சலேட்டு&oldid=1402633" இலிருந்து மீள்விக்கப்பட்டது