இலவு காத்தக் கிளி

இலவு காத்தக் கிளி
இலவ மரம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள் தொகு

இலவு காத்தக் கிளி, பெயர்ச்சொல்.

  1. வீணான காத்திருப்பது
  2. காத்திருந்து ஏமாறுவது

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. waiting in vain
  2. getting dejected after waiting for a thing to happen

விளக்கம் தொகு

  • ஒரு காரியத்திற்காக நீண்ட காலம் காத்திருந்து, அந்தக்காரியம் நடவாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றம், சோர்வு இவைகளை இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிட்டு பேசுவர்...இலவம் (பஞ்சு) காயானது மற்ற காய்களைப்போல பழுமாகிக் கீழே விழாது!! காயாகவே மரத்திலேயே முற்றிக்கடைசியில் வெடித்துச் சிதறி இனப்பெருக்கம் செய்யும்...இது தெரியாமல் ஒரு கிளி ஓர் இலவம்காயைக்கண்டு அது செந்நிறமாகப் பழுக்கும்போது கொத்தித் தின்னலாம் என்றெண்ணி அந்தக் காயையே கவனித்துக்கொண்டு காத்திருந்ததாம்...ஆனால் அந்தக்காய் தன் இயல்புப்படி முற்றி திடீரென்று ஒருநாள் வெடித்துச் சிதறிவிட்டதாம்...ஏமாந்த அந்தக்கிளி பெருந்துயருற்றதாம்...இதைப்போலவே நடக்காத ஒரு காரியத்திற்காக காத்திருப்பவர்களை இலவு காத்தக் கிளியாகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடுவர்...

பயன்பாடு தொகு

  • சுந்தரேசன் பெரும் செல்வந்தரான தன் தாய்மாமன் தனக்கும் ஏதாவது சொத்து எழுதிவைப்பார் என்று இலவு காத்தக் கிளியாகக் காத்துக்கொண்டிருக்கிறார்...அனால் அவரோ எல்லாவற்றையும் தன் பிள்ளைகளுக்கே கொடுத்துவிடப்போகிறார், நீங்களே பார்க்கப் போகிறீர்கள்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=இலவு_காத்தக்_கிளி&oldid=1222654" இலிருந்து மீள்விக்கப்பட்டது