இழைக்கோலம்

இழைக்கோலம்
இழைக்கோலம்
இழைக்கோலம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இழைக்கோலம், .

பொருள்

தொகு
  1. நீரில் கரைத்த அரிசிமாவினால் இடப்படும் வரைவுகள்/சித்திரங்கள்.


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. auspicious and decorative drawings on the floor with rice flour mixed with water in hindu homes


விளக்கம்

தொகு
  • பண்டிகை/விழா மற்றும் விசேட நாட்களில் வீட்டு வாயில்களில் காலையில் போடப்படும் இழைக்கோலம் அரிசி மாவோடு நீர் சேர்த்துக்கரைத்து ஒரு சிறு துணித்துண்டை அதில் நனைத்து எடுத்து விரல்களினிடையே வைத்துப் பிழிந்து இடப்படுவதாகும்...இந்த விசேட கோலத்திற்கு இழைக்கோலம் என்று பெயர்...நூலைப்போல் தரையில் இழைத்துப் போடப்படுவதால் இழைக்கோலம் ஆனது...இந்த முறையால் கோலங்கள் மிகத்தெளிவாகவும், அழகாகவும் அமையும்...இது வீட்டிற்கு மங்களகரமாகவும், அலங்காரமாகவும் இருப்பதோடு மட்டுமன்றி கணக்கற்ற எறும்புப்போன்ற உயிரினங்களுக்கும் உணவாகிறது... கோலங்களில் அலங்காரத்திற்காக மட்டுமின்றி தெய்வத்தன்மை கொண்ட ஸ்ரீசக்கரம் போன்ற கோலவகைகளும் உண்டு...இந்தவகைக் கோலங்களை வீட்டுமுகப்பில் இடமாட்டார்கள்...வீட்டு பூசை அறையில்தான் இவற்றிற்கு இடம்...
  • கண்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி நாளில் அந்தணர்களின் வீடுகளில், பொழுது சாய்ந்ததும் கண்ணன் நடந்து வீட்டிற்குள் வருவார் என்று பாவித்து அவரின் இரு திருப்பாத உருவங்களையும் கால்நடையைப்போலவே முன்னும் பின்னும் இழைக்கோலமாக வீடெங்கும் இட்டுக் கொண்டாடுவது வழக்கம்...கண்ணபிரான் அந்த பாதக்கோலங்களின் மீதே நடந்துவந்து உணவருந்தி, வீட்டிலுள்ளோரை ஆசீர்வதித்துவிட்டுப் போவார் என்பது ஐதீகம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இழைக்கோலம்&oldid=1218035" இலிருந்து மீள்விக்கப்பட்டது