உருத்திரச்சடை வித்து
{ஒலிப்பு}}
தமிழ்
தொகுஇல்லை | |
(கோப்பு) |
Ocimum Basilicum-seeds......(தாவரவியல் பெயர்))
உருத்திரச்சடை வித்து, .
பொருள்
தொகு- சப்ஜாச்செடியின் விதைகள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- chia seeds
இந்தி
- सब्जा
தெலுங்கு
- సభ్జా విత్తనాలు
விளக்கம்
தொகு- இந்த விதைகளைத் தரும் மூலிகைச் செடிக்கு திருநீற்றுப்பச்சை, உருத்திரச்சடை, சப்ஜா ஆகியப் பெயர்களும் உண்டு
- தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் தண்ணீரிலும், பானங்களிலும் போட்டுக் குடிப்பார்கள்...சப்ஜா என்று பரவலாக அறியப்படும்...உடற் சூட்டைத் தணிக்கும்..தண்ணீரில் நன்றாக ஊறியப்பிறகு ஒவ்வொரு விதையின் சுற்றிலும் வழுவழுப்பான வெண்மை நிற சவ்வுபோன்ற பொருள் உண்டாகி சடை சடையாகத் தோன்றும்... இது இமயமலையில் தியானத்தில் நீண்டநேரம் அமர்ந்திருக்கும் பரமசிவனின் (ருத்திரனின்) தலை ஜடை(சடை) எல்லாம் பனியால் நிறைந்து காணப்படுவதைப்போல் தோற்றமளிப்பதால் இந்த விதைகளுக்கு உருத்திர சடை என்று பெயர்.
மருத்துவ குணங்கள்
தொகு- உருத்திரச்சடை விதைகளால் மேக வெள்ளை, சீதபேதி, இரத்த மூலம் ஆகியப்பிணிகள் போகும்...
பயன்படுத்தும் முறை
தொகு- இரண்டு விராகனெடை இந்த விதைகளைப் பச்சையாக அல்லது சிறிது வறுத்து, நான்கு அவுன்சு நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றுக்கடுப்பு, உதிரபேதி, நீர் எரிச்சல், வெட்டை, விஷக்கடி ஆகியவை குணமாகும்...உருசிக்கு இந்த பானத்துடன் ஒரு அவுன்சு நன்னாரி அல்லது தாமரைப்பூ சர்பத் கலந்து அருந்தலாம்...