உற்றார் உறவினர்
சொல் பொருள்
உற்றார் – குருதிக் கலப்புடையவர் உற்றார். உறவினர் – குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர்.
விளக்கம்
உற்றார்- உடன் பிறப்பாக அமைந்தவர்; உறவினர் பெண் கொடுப்பால் உறவாவர். உறுதல்-நெருக்கமாதல்
“உற்றாரையான் வேண்டேன்; ஊர் வேண்டேன்” என்பதில் வரும் ஊர். ஊரைச் சார்ந்த உறவினரைக் குறித்ததாம். உற்றது உரைத்தல், உறுவது கூறல் என்பவனற்றில் உள்ள கால வேறுபாடு கருதுக. ஒட்டு உறவு காண்க.