ஊசி மந்திரம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஊசி மந்திரம், .
பொருள்
தொகு- மஞ்சள் காமாலை நோய் போக மந்திர சிகிச்சை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- incantation(mantra) uttered to cure jaundice using needles.
விளக்கம்
தொகு- கடந்த நாட்களில் மஞ்சள் காமாலை நோயை மந்திரத்தால் போகடிக்கலாம் என நம்பப்பட்டது...மந்திரவாதி நோயுற்றவரை மூன்று துணி தைக்கும் ஊசிகளையும் ஒரு சிறிய கிண்ணியையும் கொண்டுவரச் சொல்லுவார்...அந்தக் கிண்ணியில் தண்ணீர் பாதி அளவு ஊற்றி, ஊசிகளை மந்தரித்து அதில் போட்டுவிடுவார்...நோயாளி அந்தக் கிண்ணியை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துக்கொண்டு மறுநாள் காலையில் பார்த்தால் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்...மீண்டும் மந்திரவாதியிடம் செல்லவேண்டும்...முன்பு செய்ததைப்போலவே மறுபடியும் அவர் செய்வார்... இதே மாதிரி தண்ணீர் மஞ்சள் நிறம் பெறுவது நிற்கும்வரை செய்வார்கள்...தண்ணீர் மஞ்சளாவது என்று நிற்கிறதோ அன்று மஞ்சள் காமாலை நோய் நீங்கிவிட்டதாகக் கொள்வர்...இந்த மந்திர சிகிச்சைக்கு 'ஊசி மந்திரம்' என்பார்கள்.