எருக்கம்பால்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Calotropis Gigenta...(தாவரவியல் பெயர்)/
- Calotropis Gigantea...(தாவரவியல் பெயர்)
எருக்கம்பால், .
பொருள்
தொகு- எருக்கன் செடியின் பால்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- white fluid extracted from the crown flower plant (Calotropis Gigantea- a herb)
விளக்கம்
தொகு- எருக்கன் செடியின் கிளை, இலை ஆகிய எந்த பாகத்தை ஒடித்தாலும் பாலையொத்த வெண்மையான திரவம் சுரக்கும்...அநேக மருத்துவக் குணங்கள் கொண்ட இந்த எருக்கம்பால் வாதக்கட்டிகளைக் கரைக்கும்...வாத நோய், சந்நிபாதம், ஐந்துவகையான வலிகள், பற்களைப்பற்றிய நோய்கள் இவைகளைப்போக்கும்...
மருத்துவப் பிரயோகங்கள்
தொகு- ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் ஏழுத் துளி எருக்கம்பாலை விட்டு நன்றாகக் குலுக்கி மூக்கிற்குள் இரண்டு மூன்று துளிவிட பெரிய அளவில் தும்மல் உண்டாகும்...இந்தப் பிரயோகம் தலையிலுள்ள நீரையெல்லாம் வெளியேற்றும்...காக்கை வலிக்குச் சிகிச்சை செய்யும்போது முதலில் இந்த முறையைச் செயல்படுத்தினால் மூளையைச் சேர்ந்த சீதளத்தை அகற்றும்...தும்மலை நிறுத்த முகத்தில் குளிர்ந்த நீரை அடித்துக் குளிர்ந்த நீராலேயே மூக்குத்துவாரங்களைச் சுத்தப்படுத்தவேண்டும்...
- எருக்கம்பாலைக் கீல்பிடிப்பு, வீக்கம் இவைகளுக்கு மேல் தடவி, செடியின் அடியிலிருக்கும் மண்ணை மேல் தூவிக் காயவிட குணமாகும்...
- நஞ்சுள்ள உயிரினங்கள் கடித்தக் கடிவாயில் எருக்கம்பாலைத் தடவிப் புண்ணாக்க விடம் முறிந்துபோகும்...இந்தப் பாலுடன் இதர சரக்குகளைக்கூட்டி வாத நோய்களுக்கும், தந்த நோய்களுக்கும் எருக்கம்பால் தைலம்,வச்சிரத்தந்த மெழுகு ஆகிய மருந்துகளைத் தயாரிப்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எருக்கம்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி