எருக்கம்பூ
தமிழ்
தொகு- Calotropis Gigenta-Flower (தாவரவியல் பெயர்)
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
எருக்கம்பூ
பொருள்
தொகு- எருக்கின் மலர்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- flower of a herbal plant--Calotropis Gigenta
விளக்கம்
தொகு- இந்த மலர்களை முறைப்படி உபயோகிக்க முறைசுரம், நீங்காத நீர்ப்பீநசம், சுவாசகாசம்,கழுத்து நரம்பின் இசிவு ஆகிய உபத்திரவங்கள் போகும்...வினாயக பெருமானின் பூசைக்குரிய மலர்களில் ஒன்று...
- மருத்துவப்பயன்: எருக்கம்பூவிற்கு சமனெடை மிளகு வைத்து மைய அரைத்து இரண்டு குன்றிமணி அளவு மத்திரைகள் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்...தினம் இரண்டு வேளை ஒவ்வொரு மாத்திரை வீதம் கொடுத்துவர முறைசுரம் போம்.
- ஐந்து பலம் பசுநெய்யில் 10-12 எருக்கம் பூக்களைப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 1/2--1 தோலா வீதம் கொடுக்கச் சுவாசகாசம் , நீர்ப்பீநசம் போகும்...
- இந்தப் பூக்களை உலர்த்தி சூரணம் செய்து வேளைக்கு 1/2--1 குன்றிமணி எடை சர்க்கரையுடன் கூட்டி சில நாட்கள் கொடுத்தால் ஆரம்பநிலையிலுள்ள குட்டம், மேகரணம், வெள்ளை ஆகியவை போகும்...இதை உண்ணும் காலத்தில் பசும்பாலைத் தவிர வேறோன்றையும் உண்ணக்கூடாது.
- ஐந்து பலம் நல்லெண்ணெயில் ஒன்றரைப் பலம் எருக்கம்பூக்களைப் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடித்து குளித்துவந்தால் புறங்கழுத்தின் வலி போகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---எருக்கம்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி