ஒத்தூதுதல்

ஒத்தூதுதல்

சொல் பொருள் விளக்கம்

நெடுவங்கியம் (நாத சுரம்) ஊதுவார் ஒருவர். அவர்க்கு ஊதல் நிறுத்தல் மாறல் ஆகிய இசை முறைகள் பல உண்டு. ஆனால் பின்னே ஒருவர் ஒத்து ஊதிக் கொண்டே இருப்பார். முன்னவர் என்ன ஊதினாலும் ஒத்து ஊதுபவர் ஒரு போக்கிலேயே ஊதிக் கொண்டிருப்பார். இவ்வழக்கைக் குறித்து, ஒருவர் பேசுவதைப் பற்றிக் கருதாமல் எல்லாமும் ஆமாம் ஆமாம் என்பது போல ஒத்துப் பேசுபவரைக் குறித்து வழங்குவதாயிற்று.

இது ஒரு வழக்குச் சொல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒத்தூதுதல்&oldid=1913034" இலிருந்து மீள்விக்கப்பட்டது