ஒருதலைச் சார்பு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒருதலைச் சார்பு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  • நியாயம்,சமநீதி, உண்மை ஆகியவற்றை பார்க்காமல் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் ஆதரவு அளிக்கும் செயல்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. one sided
  2. partiality

விளக்கம் தொகு

  • ஒரு + தலை + சார்பு = ஒருதலைச் சார்பு ..வழக்கு ஒன்று உண்டாகி அதைத் தீர்க்கும் பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்போது, அவர் அந்த வழக்கை நன்றாக அலசி ஆராய்ந்துப் பார்த்து நியாயம், தர்மம், சமநீதி, உண்மை ஆகியவற்றுக்கு உட்பட்டு தீர்ப்பு கொடுக்காமல், சுயநலம் அல்லது சாதி, சமயம், மொழி, பிராந்தம், நட்பு, உறவு, பரிந்துரை போன்ற இன்னும் பல காரணங்களால் உந்தப்பட்டு, தவறு உள்ள ஒரு பக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு தரும் தன்மையை ஒருதலை சார்பு என்பர்...

சொல்வளம் தொகு

  • பாரபட்சம்
  • ஓரவஞ்சனை
  • ஒருபுடைச் சார்பு
  • பக்க சார்பு
  • பட்சபாதம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருதலைச்_சார்பு&oldid=1228166" இலிருந்து மீள்விக்கப்பட்டது