ஓட்டைகை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஓட்டைகை, .
பொருள்
தொகு- ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் கை/நபர்
- வீணாகச் செலவு செய்யும் கை/நபர்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- prodigal
- spendthrift
விளக்கம்
தொகு- பேச்சு வழக்கு...வகைதொகை பார்க்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்வதும், யோசிக்காமல் வாரி வழங்குவதும் இரு கைகளினாலேயேயாகும்...அப்படிச் செய்யும் நபருக்கு ஓட்டை விழுந்த கைகள் அதாவது எப்பொருளும் கையில் தங்காமல் இருக்கும் நிலை இருப்பதாகப் பாவித்து அவர்களை ஒட்டைகை என்றழைப்பது பேச்சு வழக்கு.
பயன்பாடு
தொகு- தேவையில்லாமல் வீட்டில் ஊரிலுள்ள எல்லா உறவினர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு நாட்கணக்கில் எப்படி உபச்சாரம் பண்ணுகிறான் பார், அந்த நாராயணசாமி...சரியான ஓட்டைகை... போகபோகதான் அவனுக்குத் தெரியப்போகிறது, வெல்லம் இருக்குமிடம்தான் ஈ மொய்க்கும் என்று...