ஓதி விடு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஓதி விடு வினைச்சொல் .
பொருள்
தொகு- அன்பளிப்பு செய்தல்
- கோள் சொல்லல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- giving gifts
- talking ill of a person to another
விளக்கம்
தொகு- திருமணம், பூச்சூட்டல், சீமந்தம் போன்ற சுபகாரியங்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டோர் அளிக்கும் அன்பளிப்புகளை அறிவிக்கும் முறைக்கு ஓதி விடுதல் என்பர்கள்.. இதையே 'மொய் எழுதுதல்' என்றும் சொல்லுவார்கள்..அப்படியான அன்பளிப்புகளை ஒருவர் உரத்த குரலில் இன்னார், இந்த உறவினர், இதை அன்பளிக்கிறார் என்று ஓத (சொல்ல/படிக்க) மற்றொருவர் விவரமாக எழுதிக்கொள்ளுவார்.
- ஒருவர் மீது மற்றவரிடத்தில் தீங்காக கோள் சொல்லுவதற்கும் ஓதி விடுதல் என்பர்.
பயன்பாடு
தொகு- என் மருமகள் திருமணத்திற்கு ஐந்தாயிரம் உரூபாய்கள் ஓதி விட்டேன்.
- சுகுமாரன் என்னோடு இப்போதெல்லாம் சரியாகப் பேசுவதில்லை...யாரோ என்னைப் பற்றி ஓதி விட்டிருப்பார்கள்.